மொழி
மொழி என்ப து ஒரு தொடர்புச் சாதனம் மட்டுமன்று, அது மனித சிந்தனைக்கும், கற்பனைக்கும், மற்றும் பகுப்பாய்விற்கும், இவற்றைச் சார்ந்த செயல்களுக்கும் அடிப்படையானது. மொழியே இலக்கியங்களினதும் அறிவியலினதும் தோற்றுவாய். அதனடிப்படையில், மொழி என்ப து மரபுகளின் தொகுப்பு;
பண்பாட்டின் அடிப்படைக் கூறு; நடைமுறை வாழ்வின அடித்தளம்; நாகரிகத்தின் தோற்றுவாய் என வரையறுக்கலாம். எனவே, எந்த மொழியில் படைக்கப்படும் இலக்கியங்களும் அம் மொழி பேசும் மக்களின் பண்பாட்டையும் மரபையும் பிரதிபலிக்கின்றது. இதனடிப்படையில் தமிழ் ஒரு மொழி மட்டுல்ல அது பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் வாழ்வியல், ஒரு உயரிய பண்பாட்டின் அடித்தளம், இவ்வாழ்வியலுக்கு சான்றாக
அமைவது பழந்தமிழ் சங்க இலக்கியங்களே . மனிதன் இயற்கையுடன் சேர்ந்து வாழ்ந்ததைப்பற்றியும், பிற உயிர்களுடன் இசை பட வாழ்ந்ததைப்பற்றியும், தன் சக மனிதனுடன் கலந்து மகிழ்வுடன் வாழ்ந்ததைப் பற்றியும் “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்”, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று சங்க இலக்கியங்கள் அழகாக எடுத்துரைக்கின்றன. இந்த அறம் தோய்ந்த பண்பாடுகளும், அழகிய வா ழ்வியலும் ஆராயப்பட
வேண் டிய பல காரண ங்களா லும், நீண்டநெடிய காலப்போக்காலும் மறைக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், மறக்கப்பட்டும்விட்டது. இயற்கையுடன்n இசை பட வாழ்வதும், அழிந்து கொண் டிருக்கும் மற்ற உயிரினங்களைக்
காப்பதும், பிறரை தன்னைப்போல் நேசிப்பதையும் மீட்டெடுக்கவேண் டியது இக்காலகட்டத்தில் மிக மிக அவசியமானதொன்று. இவ்வாழ்வியல் மீட்டெடுக்கப்பட வேண்டுமானால், தமிழ் மொழியையும், அதன் தொல்லிலக்கியங்களையும், பண்பாட்டு எச்சங்களையும், வாழ்வியல் கூறுகளையும் மற்றும் நாகரிகத்தின் தொன்மங்களையும் மீளுருவாக்கம் செய்வது தமிழ்மொழியைப் பாதுகாக்கும் வழிகளில் ஒன்றாகும். இதை மீளுருவாக்கம் செய்வதும், அவற்றை எமது வருங்கால சந்ததியினருக்கு
கடத்துவதும் எமது கடமை . இது கவனமாகவும், நேர்த்தியாகவும், அறிவியல்பூர்வமாக திட்டமிட்டும் செய்யவேண் டிய ஒரு மாபெரும் செயல்திட்ட ம். இந்த வாழ்வியலினதும், பண்பாட்டினதும், மரபுகளினதும் அழிவு ஓரிரண்டு நாட்களில் நடந்ததல்ல, இது பலநூறு சந்ததிகளாக நடந்தேறிய ஒரு சோகம். எனவே இந்த மீளுருவாக்க வேலைத்திட்டம் ஒரு குறுகிய செயல்திட்டமல்ல, இதுவும் சந்ததிசந்ததியாக செய்து வரவேண்டிய ஒரு நடவடிக்கையாகும்.
4
தமிழ் பேசும் மக்கள் உலகளாவிப் பரந்து வாழ்வதால் தமிழ் மொழியின் வளர்ச்சி தமிழ் பேசும் மக்களின் ஒரு பொதுத்தேவை ஆகின்றது. தமிழை அடுத்த சந்த தியினருக்கு கடத்துவது எமது பெருங்கடமையாகும். இதை விட, ஒரு மொழி அழிந்தால் அம்மொழி பேசும் இனமும் அழியும், அதனால் தமிழ் மொழியை அழியவிடாதுகாப்பதும், அதன் வாழ்வியலை மீட்டெடுப்பதும் எமது தலையாய கடமையாகின்றது. இந்த மீளுருவாக்கப்பணியின் ஒரு சிறு வேலைத்திட்டமாக நாங்கள் இலண்டன் மாநகரில் ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்க முனைந்துள்ளோம். இவ்வருங்காட்சியகத்தில் தமிழ் மொழி, தமிழிலக்கியங்கள், பண்பாட்டுக்கூறுகள், மரபுகள், பண்டைய வாழ்வியல், நாகரிகங்கள், அரசியல் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் ஆதாரங்களையும் மற்றும் விளக்கங்களையும் காட்சிப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு உங்கள் அனைவரினதும் அர்ப்பணிப்பையும் ஆதரவையும் நாங்கள் வேண்டி நிற்கின்றோம்.
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.