எம்மைப்பற்றி
- முகப்பு
- வட மொழிச் சொற்களை விலக்கல்
வட மொழிச் சொற்களை விலக்கல்
அறிமுகம்
தமிழ் மொழியில் பல மொழிச் சொற்கள் கலந்து காணப்படும் போதும், வட மொழிச் சொற்களே மிகுதி. மேலும் அவையே கூடுதலாகக் கேடானவை, ஏனெனில் அவற்றினையும் எம்மில் பலர் தமிழ் என்றே எண்ணியிருப்பதாலாகும். நாம் ஏற்கனவே பார்த்தது போல வடமொழி தமிழுக்கு ஒரு `கேள் போல் பகை` (உறவாடிக்கெடுக்கும் பகை) ஆகும். இவ் வடமொழிச் சொற்களை இனங் காண்பதற்குச் சரியான முறையாக வேர்ச்சொல் ஆய்வே காணப்படும். தமிழிலுள்ள சொற்கள் யாவுமே பொருள் குறித்தனவே என ஏற்கனவே பார்த்துள்ளோம். எனவே வேர்ச்சொல் விளக்கம் உரிய முறையிலிருந்தால், அச் சொல் தமிழே. வடமொழிச் சொற்களை இனங் காண்பதற்குச் சில வழிமுறைகளிலிருக்கின்றன. அவற்றினை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
- ஒரு சொல்லில் கிரந்த எழுத்துகள் { ஸ,ஷ,ஜ,ஹ,ஸ்ரீ…} இருந்தால் , அச் சொல் தமிழல்ல. அவ்வாறான சில வடமொழிச் சொற்களையும், அவற்றுக்கான தமிழ்ச் சொற்களையும் பார்ப்போம்.
வருஷம் = ஆண்டு
சந்தோஷம் = மகிழ்ச்சி
போஜனம் = உணவு
சகஜம் = வழக்கம்
ஸந்ததி = கால்வழி
ஐனநாயகம் = மக்களாட்சி
அதே வேளை சில தமிழ்ச் சொற்களிடையே கிரந்த எழுத்துகளை வலிந்து புகுத்தியுள்ளார்கள்(எ.கா– புஸ்தகம், வேஸ்டி). இவற்றில் கிரந்த எழுத்துகளை நீக்கிப் பயன்படுத்த வேண்டும் (எ.கா– புத்தகம், வேட்டி). எவ்வாறு இனங் காண்பது? வேர்ச் சொல் விளக்கமே தீர்வாகும். எடுத்துக்காட்டாக, பழங்காலத்தில் ஒலைச் சுவடிகளைப் பொத்தி வைத்துப் பேணி வந்ததால், அவை பொத்தகம் என அழைக்கப்பட்டுப் பின் `புத்தகம்` என மருவியது. அதே போன்று துணியினை வெட்டுவதால் , வேட்டி எனப்பட்டது {அறுப்பதால் அறுவை (உடை) போன்று}.
- பெருமளவிற்கு முன்னொட்டுக் கொடுத்து எதிர்ச்சொற்கள் ஆக்கப்படும் `சொல்–இணைகள்` வடமொழிச் சொற்களே. குறிப்பாக `அ` முன்னொட்டுப் பயன்படுத்தப்படும் இணைகள். அவ்வாறான சிலவற்றைப் பார்ப்போம்.
சாதரணம்– அசாதரணம் ::: வழமை – வழமையல்லாத
தர்மம் – அதர்மம் ::::: அறம்– அறமின்மை
சுத்தம் – அசுத்தம் ::::: தூய்மை – அழுக்கு
கிரமம் – அக்கிரமம் ::::: ஒழுங்கு – ஒழுங்கின்மை
ஹிம்சை – அஹிம்சை :::: வன்முறை – வன்முறையற்ற
- தமிழில் முதலெழுத்தாகச் சில எழுத்துகள் (ட, ண, ர, ல, ழ, ள, ற, ன) வராது. அவ்வாறு வந்தால் அவை வடமொழிச் சொற்களே!
லட்சம் – நூறாயிரம்
லட்சியம் = குறிக்கோள்
ரதம் = தேர்
ராத்திரி = இரவு
யதார்த்தம் = இருப்புநிலை, உண்மைநிலை
ரகசியம் = மறைபொருள்
{ மேலுள்ள சொல்லினை இரகசியம் என எழுதினாலும் அது தமிழாகாது}
- தமிழில் குறில் எழுத்தில் தொடங்கும் தமிழ்ச் சொல்லுக்கு அடுத்து `ர்` என்ற மெய் தோன்றாது. அவ்வாறு தோன்றின் அது தமிழல்ல.
அர்த்தம் = பொருள்
அர்ப்பணம் = படையல்
சொர்க்கம் = பரமபதம்
கர்மம் = செயல்
சர்வம் = எல்லாம்
- `சௌ` என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களும் தமிழாகாதவை.
சௌக்கியம் = நலம்
சௌந்தர்யம் = பேரழகு
மேற்கூறிய முறைகளைக் கடைப்பிடித்துப் பெருமளவு சொற்களை இனங் கண்டுகொள்ளலாம். இவற்றினைத் தவிர ஏனைய வட சொற்களை வேர்ச்சொல் விளக்கம் மூலமே கண்டுகொள்ள முடியும்.
அதே வேளை `ச` வரிசையிலேயே தமிழ்ச் சொற்கள் தொடங்காது என்றொரு பிழையான கருத்துண்டு. அதனையும் பார்த்து விடுவோம்.
`ச` வரிசை முதல் எழுத்தாக வருமா?
தொல்காப்பியம் `ச` வரிசையில் தமிழ்ச் சொற்கள் தொடங்காது எனச் சொன்னதா? அல்லது தொல்காப்பியத்தினைப் படி (Copy) எடுக்கும் போது ஏற்பட்ட தவறினால் அவ்வாறு இடம்பெற்றதா! எனப் பார்ப்போம். முதலில் சங்க இலக்கியங்களில் `ச` இல் தொடங்கும் சொற்கள் உள்ளனவா? என ஆராய்ந்தால், இக் குழப்பம் தீரும். சகடம், சடை, சந்து, சந்தி, சமழ்ப்பு என ஒரு நீண்ட வரிசையில் தமிழ்ச் சொற்கள் சங்க இலக்கியங்களில் கொட்டிக்கிடக்கின்றன. தொல்காப்பியர் அவ்வாறு சொல்லியிருந்தால், சங்க இலக்கியங்களில் அந்த விதி மீறப்பட்டிருக்காது. `சமன்` எனும் சொல் திருக்குறளிலேயே உண்டு . தொல்காப்பியர் கூறியிருந்தால், வள்ளுவரே மீறியிருப்பாரா? அவ்வாறாயின் தொல்காப்பியர் சொன்னதாகக் கருதப்படுவது யாது?
“சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே
அ ஐ ஔ என்னும் மூன்றலங் கடையே“
இதனைக் கொண்டே இக் குழப்பம். இது தொல்காப்பிய மூலத்திலிருந்து படி எடுக்கும்போது ஏற்பட்ட குழறுபடியாகவோ அல்லது வேண்டுமென்றே `ச` இல் தொடங்கும் தமிழ்ச் சொற்களை களவாடும் வஞ்சக நோக்கில் செய்யப்பட்ட ஒரு திரிபு வேலையாகவோ இருக்கலாம். அவ்வாறாயின் அதன் மூல வடிவம் என்ன? இதோ மொழி ஞாயிறு பாவாணர் சொல்கின்றார்.
“சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அவை ஒளஎன்னும் ஒன்றலங் கடையே” .
அதாவது `சௌ ` எழுத்தில் மட்டும் தொடங்காது என்கிறார். முடிவாக, `ச` என்ற எழுத்தில் தமிழ்ச் சொற்கள் தொடங்கும். `ச` வில் தொடங்கும் சில வட மொழிச் சொற்கள் உண்டு {சதா,சக்தி…}. ஆனால் `ச` வரிசையில் தொடங்கும் பல்லாயிரக் கணக்கான தூய தமிழ்ச் சொற்களுமுண்டு. `ச` வரிசையில் இடம்பெறும் `சௌ` என்ற எழுத்தில் மட்டுமே தமிழ்ச் சொற்கள் தொடங்க மாட்டாது.
மேற்கூறிய விதிகளைக் கொண்டு பெருமளவான வடமொழிச் சொற்களைக் கண்டு கொள்ளலாமெனினும், முழுமையாக அறிந்து கொள்ள வேர்ச் சொல் விளக்கமே தீர்வாக அமையும். அந்த வகையில் ஒவ்வொரு எழுத்திலும் தொடங்கும் வடமொழிச் சொற்களையும் அவற்றுக்கான தமிழ்ச் சொற்களையும் பார்ப்போம். இப் பட்டியலில் எம்மால் பெருமளவுக்குப் பயன்படுத்தப்படும் வடமொழிச் சொற்களை மட்டுமே கவனத்திலெடுத்துள்ளோம்.
கிரந்தம் தவிர் – தமிழ் பழகு
அ
அகங்காரம் – செருக்கு
அகம்பாவம் – செருக்கு
அகதி – ஏதிலி
அகாலம் – தகாக் காலம், அல்காலம்
அகிம்சை-இன்னா செய்யாமை, வன்முறையற்ற
அகில – முழு
அகிலம் – உலகம்
அக்கிரமம் – முறைகேடு
அக்கினி நெருப்பு, தீ
அகோரம் – கொடுந்தோற்றம்
அங்கவஸ்த்திரம்- மேலாடை
அசடு – பேதை
அசம்பாவிதம்- நேரக்கூடாதது
அசுரன் – அரக்கன்
அதிதி – விருந்தாளி
அந்திமம் – கடைசி
அநாதி – அறிவுக்கெட்டா பழமை
அப்பாவி – பேதை
அப்பியாசம் – பயிற்சி
அபயம்- அடைக்கலம்
அபாரம்- அளவின்மை
அம்சம்- அழகு
அமிலம் – புளிக்காரம்
அர்ச்சகர் – பூசகர்
அர்த்தம் – பொருள்
அருவம் – உருவமற்றது
அலங்கரித்தல் – புனைதல்
அலாதி – தனிச்சிறப்பு
அசலம் – உறுப்பு
அசூயை – பொறாமை
அதிபர் – தலைவர்
அதிருப்தி – மனக்குறை
அதிருஷ்டம்- ஆகூழ், நல்லூழ்
அதிசயம் – வியப்பு
அதீதம் – மிகை
அத்தியாவசியம் –இன்றியமையாதது
அநாவசியம் -வேண்டாதது
அநேகம் – பல
அந்தரங்கம்- மறைபொருள்
அபகரி -பறி, கைப்பற்று
அபாயம் -இடர்
அபிப்ராயம் -கருத்து
அபிஷேகம் -திருமுழுக்கு
அபூர்வம் -புதுமை
அமிசம் -கூறுபாடு
அயோக்கியன் -நேர்மையற்றவன்
அர்த்தநாரி -உமைபாகன்
அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த
அர்த்தம் -பொருள்
அர்த்த ஜாமம் – நள்ளிரவு
அர்ப்பணம் -படையல்
அலங்காரம் -ஒப்பனை
அலட்சியம் – புறக்கணிப்பு
அஞ்ஞானம் – அறியாமை
அஸ்தமனம் – மறைவு
அன்னியன் -அயலன்
அனர்த்தம் – கேடு
அனுசரி- ஏற்றுநட
அனுதாபம் – இரக்கம்
அவசரமாக – உடனடியாக, விரைவாக
அவஸ்தை – நிலை, தொல்லை
அற்பமான – கீழான, சிறிய
அற்புதம் – புதுமை
அனாதை – துணையிலி
அனுபவம் – பட்டறிவு
அனுமதி – இசைவு
அங்கீகாரம் – ஏற்பு / ஏற்பளிப்பு
அந்தரங்கம் – மறைவடக்கம்
அபிவிருத்தி – விரிவாக்கம்
அபேட்சகர் – வேட்பாளர்
———————————————————————————————–
ஆ
ஆச்சரியம் – வியப்பு
ஆக்ஞை – ஆணை, கட்டளை
ஆட்சேபணை – தடை, மறுப்பு
ஆட்சேபம் – மறுப்பு
அநீதி – முறைகேடு
ஆபத்து – இடர்
ஆமோதித்தல் – வழிமொழிதல்
ஆயுதம் – கருவி
ஆரம்பம் -தொடக்கம்
ஆராதனை -வழிபாடு
ஆரோக்கியம் – உடல்நலம்
ஆலோசனை – அறிவுரை
ஆனந்தம் – மகிழ்ச்சி
ஆன்மீகம்-இறைமை
ஆக்கிரமிப்பு – கைப்பற்று, வன்கவர்வு
ஆகாரம்- உணவு
ஆகாயம்- விசும்பு, வான்
ஆசனம்- இருக்கை
ஆசாமி- ஆள்
ஆத்திரம்- சினம்
ஆத்மா – உயிர்
ஆதாரம்- சான்று
ஆடம்பரம் – பேரெடுப்பு
ஆதங்கம் – ஆவல்
ஆபாசம் – இழிகாமம்
ஆமோதித்தல் – வழிமொழிதல்
ஆயத்தம் – தொடக்கம், ஏற்பாடு
ஆரம்பம் – தொடக்கம்
ஆராதனை – வழிபாடு
ஆலம் – நஞ்சு
ஆலோசனை – அறிவுரை
……………………………………………………………………………………………………….
இ
இஷ்டம் – விருப்பம்
இங்கிதம் – இனிமை
இலாபம்- ஆதாயம்
இரசாயனவியல் – வேதியல்
இராகம் – பண்
இராணுவம் – தரைப்படை
இலஞ்சம் – கையூட்டு
இடபம் – எருது
இதிகாசம் – பெருங்கதை
இரகசியம் – மறைபொருள்
இரத்தம்- குருதி, அரத்தம்
…………………………………………………………………………………………………….
ஈ
ஈன ஜன்மம் – இழிந்த பிறப்பு
ஈனஸ்வரம் – மெலிந்த ஓசை
…………………………………………………………………………………………………………..
உ
உக்கிரமான – கடுமையான
உபசாரம் – முகமன் கூறல்
உபயோகம் – பயன்
உதாசீனம் – பொருட்படுத்தாமை
உத்தரவாதம் – பிணை, பொறுப்பு
உத்தரவு – கட்டளை
உல்லாசம் – களிப்பு
உற்சாகம் – ஊக்கம்
உற்சவம் – திருவிழா
உதாரணம்-சான்று/ எடுத்துக்காட்டு
உபகரணம் – துணைக்கருவி
உபகாரம் – உதவி
உல்லாசம் – களிப்பு
உற்பத்தி – ஆக்கம்
உபதேசம் – அறிவுரை
உபாதை – நோ, வலி
உலோகம்- கனிமம்
உன்னதம் – உயர்ச்சி
………………………………………………………………………………………………………………
ஊ
ஊனம் – குறைபாடு
ஊகம் – உய்த்துணர்வு
ஊர்ஜிதம் – உறுதிப்பாடு
ஊனம் – குறைவு
ஊதாரி – செலவாளி
………………………………………………………………………………………………………..
எ
எக்காளம் – பெருநகை, பேரொலி
எதார்த்தம் – இயல்பு
எதேச்சதிகாரம் – தன்விளைவாட்சி
எமன் – கூற்றுவன்
………………………………………………………………………………………………………………
ஏ
ஏகபோகம் – தனித்துய்ப்பு
ஏகாதிபத்தியம் – தனியிறமை
ஏகோபித்த – ஒருமித்த
………………………………………………………………………………………………………….
ஐ
ஐதீகம் – சடங்கு, நம்பிக்கை
ஐக்கியம் – ஒன்றுபடல்
ஐக்கிய – ஒன்றுபட்ட
ஐஸ்வர்யம் – செல்வம்
…………………………………………………………………………………………………
ஒ
ஒய்யாரம் – வீறெழல்
………………………………………………………………………………………………………….
ஔ
ஔடதம் – மருந்து
……………………………………………………………………………………………………….
………………………………………………………………………….
………………………………..
`க` வரிசை
கர்ப்பக்கிருகம் – கருவறை
கர்மம் – செயல்
கலாச்சாரம் – பண்பாடு
கலாரசனை – கலைச்சுவை
கண்டம் – பெரு நிலப்பரப்பு
கணம் – நொடி
கல்யாணம் – மணவினை, திருமணம்
கதம்பம் – கலப்பு
கதி – புகல்
கஷ்டம் – தொல்லை, துன்பம்
கம்பீரம் – பீடு , வீறு , தோற்றப்பொலிவு
கரகோசம் – கைதட்டல்
கருமம் – செயல்
கலாசாலை – கல்விக்கூடம்
கலாநிதி – முனைவர்
கவசம் – காப்பு
கனிஷ்ட – இளைய
காதகம் – கொலை
காத்திரம் – பெறுமதி
காரியம் – செயல்
காரியதரிசி – செயலர்
காலாவதி – காலமுடிவு
காலி – வெறுமை
கிரகணம் – மறைப்பு
கிரகம் – கோள்
கிரமம் – ஒழுங்கு
கிரயம் – செலவு
கிராமம் – ஊர்
கிரி – மலை
கிரியை – செய்கை
கிரீடம் – முடி
கிருபை – அருள்
கிருமி – நுண்ணுயிர்
கிலி – அச்சம்
கிலேசம் – கவலை
கீதம் – பாட்டு, இசை
கீர்த்தி – புகழ்
கீர்த்தனை- பாமாலை, பாடல்
கும்பாபிஷேகம் = குடமுழுக்கு
குதூகலம் – பேருவகை
கும்மாளம் – கூத்தடிப்பு
குரோதம் – வன்மம்
கேவலம் – கீழ்மை
கேளிக்கை– பொழுதுபோக்கு
கேசம் – தலைமயிர்
கேலி – பகடி
கைங்கரியம் – அறப்பணி, செய்கை
கோபம்– சினம்
கோஷம் – ஒலி
கோசம் – முழக்கம்
கோஷ்டி – குழு
கோரம் – கொடுமை
கௌரவம்-மதிப்பு
……………………………………………………………………………………………………
ச வரிசை
சக – உடன்
சகவாசம் – தொடர்பு
சகலம் – எல்லாம், அனைத்தும்
சகஜம் – வழக்கம்
சகாயம் – துணை
சகி – தோழி
சகிப்பு – பொறுமை
சகோதரன் – உடன் பிறந்தவன்
சகோதரி – உடன் பிறந்தவள்
சங்கடம் – இக்கட்டு, தொல்லை
சங்கதி – செய்தி
சங்கோஜம் – கூச்சம்
சதம் – நூறு
சதவீதம்/சதமானம் – விழுக்காடு
சதா – எப்பொழுதும்
சதி- சூழ்ச்சி
சத்தம் – ஓசை, ஒலி
சத்தியம் – வாய்மை
சஞ்சலம் – கலக்கம்
சஞ்சிகை – இதழ்
சந்தானம் – மகப்பேறு
சந்தேகம் – ஐயம்
சந்தோஷம் – மகிழ்ச்சி
சபதம் – சூளுரை
சம்சாரம் – குடும்பம், மனைவி
சம்பந்தம் – தொடர்பு
சம்பவம் – நிகழ்ச்சி
சம்பாதி – ஈட்டு, பொருளீட்டு
சம்பிரதாயம் – மரபு
சம்மதி – ஒப்புக்கொள்
சமீபம் – அண்மை
சரணாகதி – அடைக்கலம்
சரித்திரம் – வரலாறு
சரீரம் – உடல்
சருமம் -தோல்
சர்வம் – எல்லாம்
சமீப காலத்தில்-அண்மைக் காலத்தில்/சமகாலத்தில்
சதுரம்- நாற்கரம்
சதுரங்கம் – வல்லாட்டம், வல்லு
சக்தி – ஆற்றல், வலு
சஞ்சிகை – இதழ்
சத்தியம் – உண்மை
சத்தியப் பிராமணம் – உறுதிமொழி
சத்து – ஊட்டம்
சந்ததி – வழித்தோன்றல்
சமதானம் – அமைதி, இணக்கம்
சமஷ்டி – கூட்டமைப்பு
சரளம் – ஒழுங்கு
சரண் – அடைக்கலம்
சவுக்காரம் – வழலை
சத்திர சிகிச்சை – அறுவை மருத்துவம்
சத்துரு – பகைவன்
சந்தர்ப்பம் – வாய்ப்பு
சந்திரன் – நிலா, மதி
சம்மேளம் – ஒன்றியம்
சமத்து – திறமை
சமர்ப்பணம் – படையல், காணிக்கை
சர்ப்பம் – பாம்பு
சர்வகலாசாலை – பல்கலைக்கழகம்
சனம் – மக்கள்
சாதாரணம் – எளிமை, பொதுமை
சாமி / ஸ்வாமி- கடவுள்/ தெய்வம்/ இறைவன்
சாதித்தல் – நிறைவேற்றுதல், விடாது பற்றுதல்
சாதம் – சோறு
சாந்தம் – அமைதி
சாகசம் – துணிவு, பாசாங்கு
சாராமிசம் – பொருட்சுருக்கம்
சாயந்திரம் – மாலை வேளை, அந்திப் பொழுது
சாவகாசம் – விரைவின்மை
சாஸ்திரம் – நூல்
சாசுவதம் – நிலை
சாரதி – ஒட்டுநர்
சாரம் – பிழிவு
சாசனம் – முறி, ஏடு
சாடை – போக்கு
சாத்தியம் – கைகூடல், இயன்மை
சாத்திரம் – நூல், கணிப்பு
சாத்விகம் – பொறையுடமை
சாதம் – சோறு
சாதனம் – கருவி
சாதனை – அடைவு
சாதுரியம் – திறமை
சாவகாசம் – கால ஈவு
சிகிச்சை – மருத்துவம்
சித்தாந்தம் – கொள்கை, முடிவு
சித்திரம் – ஓவியம்
சிநேகிதம் – நட்பு
சிரத்தை – அக்கறை, கருத்துடைமை
சிரமம் – தொல்லை
சின்னம் – அடையாளம்
சிகரம் – உச்சி
சிங்காசனம் / சிம்மாசனம் – அரியணை
சிசு – மகவு
சிருஷ்டி – படைப்பு
சித்திரவதை – கொடுமை, ஆரஞர்
சிபார்சு – பரிந்துரை
சிரஞ்சீவி – நீடுவாழ்வார்
சிரேஷ்ட – மூத்த
சீக்கிரமாக – விரைவாக
சீதனம் – மணக்கொடை
சீமான் – திருவாளன்
சீமாட்டி – திருவாட்டி
சீலம் – ஒழுக்கம்
சுதந்திரம் – தன்னுரிமை, விடுதலை
சுத்தமான – தூய்மையான
சுபாவம் – இயல்பு
சுலபம் – எளிது
சுவாரஸ்யமான – சுவையான
சுகப் பிரசவம்-நலப் பேறு
சுகந்தம் – நறுமணம்
சுகபோகம் – இன்ப நுகர்வு
சுகம் – நலம்
சுகவீனம் – நலக்குறைவு
சுகாதாரம் – நலவியல்
சுதந்திரம் – விடுதலை , தன்னாட்சி
சுதேசம் – தன்னாடு
சுந்தரம் – அழகு
சுமார் – ஏறத்தாழ
சுயநலம் – தன்நலம்
சுயம் – தன்னிலை
சுவாசம் – மூச்சு
சுவீகாரம் – ஏற்கை
சூனியம் – வெறுமை
சூட்சுமம் – மறைபொருள்
சூசகம் – குறிப்பு
செலாவணி – பணமாற்று
சேவை – பணி, தொண்டு
சேனாதிபதி – படைத்தலைவன்
சொர்க்கம்- பரமபதம்
சௌகர்யம் – வசதி, நுகர்நலம்
சௌக்கியம் – நலம்
………………………………………………………………………………………………………….
த வரிசை
தசம் – பத்து
தத்துவம் – உண்மை
தம்பதியர் – இணையர்
தரிசனம் – காட்சி
தர்க்கம் – வழக்கு
தர்க்க வாதம் – வழக்காடல்
தகவல் – செய்தி
தரம் – தகுதி
தகனம் – எரிப்பு
தசாப்தம் – பதிற்றாண்டு
தட்சணை – காணிக்கை
தணிக்கை – கட்டுப்பாடு, நீக்கம்
தத்ரூபம் – மெய்த்தோற்றம்
தந்தம் – பல், மருப்பு
தந்தி – தொலைவரி
தபால் – அஞ்சல், திருமுகம்
தயார் – அணியம்
தயாரித்தல் – ஆக்கம்
தரகர் – முகவர்
தர்க்கம் – சொற்போர்
தர்மம் – அறம், தருமம்
தரணி – உலகு
தரப்பு – பக்கம், சார்பு
தராசு – துலாக்கால், துலை
தராதரம் – தகுதி
தரித்தல் – நிற்றல்
தருணம் – பொழுது
தலம் – இடம்
தனம் – செல்வம்
தாபம் – வேட்கை
தாசன் – அடிமை
தாமதம் – காலநீட்டம், நேரந் தவறுகை
தாக்கல் – பதிவு
தாபனம் – நிறுவனம்
தாம்பூலம் – வெற்றிலை பாக்கு
தார்மீகம் – அறப்பண்பு
தாரம் – மனைவி
தாவரம் – புதல் , நிலைத்தழை
தாவரவியல் – புதலியல்
தானியம் – கூலம்
தானம் – கொடை, ஈகம்
தாற்பரியம் – உட்பொருள், குறிப்புப் பொருள்
திகில் – அதிர்ச்சி
திருப்தி – நிறைவு
தினசரி – நாள்தோறும்
திராட்சை- முந்திரி
தியாகம் – கொடை,ஈகம்
திரவம் – நீர்மம்
திருப்தி – மனநிறைவு
திலகம் – பொட்டு
தினசரி – நாளிதழ், நாள் தோறும்
தீர்க்கதரிசி _ ஆவதறிவார், தொலைநோக்கர்
தீர்க்கம் – முடிவு
தீர்க்காலோசனை – நீள்சூழ்வு
தீர்க்காயுள் – நெடுவாழ்வு
தீவனம் – தீன்
தீவிரம் – விரைவு, உறுதி
துரதிருஷ்டம் – பேறின்மை
துரிதம் – விரைவு
துரோகம் – வஞ்சனை, இரண்டகம்
துவம்சம் – அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்
துல்லியம் – தெளிவு
துவாரம் – துளை
துவேசம் – வெறுப்பு
தேகம் – உடல்
தேசம் – நாடு
தைரியம் – துணிவு
தைலம் – எண்ணெய்
தொனி – ஒலி, குறிப்பு
தோசம் – குற்றம்
தோத்திரம் – வாழ்த்துப்பா
……………………………………………………………………………………………………………………………
ந வரிசை
நட்சத்திரம் – விண்மீன், நாள்மீன்
நமஸ்காரம் – வணக்கம்
நர்த்தனம் – ஆடல், நடனம்,கூத்து
நவீனம் – புதுமை
நவீன பாணி – புது முறை
நடுநிசி – நள்ளிரவு
நட்டம் – இழப்பு
நதி – ஆறு
நந்தவனம் – பூஞ்சோலை, பொழில்
நபர் – ஆள்
நவம் – ஓன்பது
நாசம் – அழிவு, வீண்
நாசூக்கு – நயம்
நாயகன் – தலைவன்
நாயகி – தலைவி
நிஜம் – உண்மை, உள்ளது
நிசபதமான – ஒலியற்ற, அமைதியான
நிர்வாகம் – ஆற்றுகை, அமைத்துவம்
நிர்வாகி – ஆற்றுநர்
நிச்சயம் – உறுதி
நிச்சயதார்த்தம் – மண உறுதி
நிதானம் – பதறாமை
நித்திய பூஜை – நாள் வழிபாடு
நிரூபி – மெய்ப்பி, நிறுவு
நிருவாகம் – மேலாண்மை
நிபுணர்-வல்லுநர்
நிமிடம்-மணித்துளி
நிரபராதி-குற்றமற்றவர்
நித்திரை – தூக்கம்
நிதர்சனம் – கண்கூடு
நிந்தனை – வசை , தூற்றல்
நிபந்தனை – வரையறை
நிராயுதபாணி – கருவியிலி
நிருபர் – செய்தியாளர்
நிவாரணம் – துயர் துடைப்பு, இடரொழிப்பு
நீதி – அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை
நீதிபதி – நடுவர்
நீதிமன்றம் – முறைமன்றம், வழக்காடு மன்றம், அறங்கூறு அவையம்.
நூதனம் – புதுமை
…………………………………………………………………………………………………
ப வரிசை
பகிரங்கம் – வெளிப்படை
பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து
பரவசம் – மெய்மறத்தல்
பராக்கிரமம் – வீரம்
பராமரி – காப்பாற்று , பேணு
பரிகாசம் – இகழ்ச்சிச் சிரிப்பு
பரிசோதனை – ஆய்வு
பரிதாபம் – இரக்கம்
பரீட்சை – தேர்வு
பலவந்தமாக – வற்புறுத்தி
பலம்-வலிமை
பலவீனம் – மெலிவு, வலிமையின்மை
பலாத்காரம் – வன்முறை
பக்தி- இறையன்பு, பற்று
பகீரதப் பிரயத்தனம் – பெரு முயற்சி , கடு முயற்சி
பஜனை-பத்திமை
பரீட்சார்த்த முறையில்= சோதனை முறையில்
பட்சணம்= பலகாரம் அல்லது நொறுக்குண்டி
பங்கம் – குறை
பச்சத்தாபம் – கழிவிரக்கம்
பத்திரிகை – செய்தித்தாள், தாளிகை
பதார்த்தம் – உணவுப்பொருள்
பயம் – அச்சம்
பயங்கரம் – பேரச்சம்
பயங்கரவாதம் – உட்கம்
பயங்கரவாதி – கேடன், அச்சுறுத்தன்
பந்தம் – கட்டு , பற்று,
பயணம் – செலவு
பராக்கிரமம் – பேராண்மை
பரிணாமம் – கூர்ப்பு, படிமலர்ச்சி
பலாத்காரம் – வன்செயல்
பலி – மடை
பாணம் – அம்பு
பாதம் – அடி
பாரம் – சுமை
பால்யம் – இளமை
பாண்டித்தியம் – துறைத்திறன்
பாத்திரம் – கலம், வேடம்
பாதகம் – பெருங்கேடு
பாதாளம் – கீழுலகம்
பாரபட்சம் – பக்கசார்பு
பாரம் – சுமை
பாரம்பரியம் – மரபு
பாரிசவாதம் – பக்க இழுப்பு
பாமரன் – படிப்பிலி
பாலகன்/ பாலகி/ பாலன் – குழந்தை
பாலியம் – குழந்தைப் பருவம்
பாரியார்/ பாரியாள் – மனைவி
பாவம் – தீவினை, மெய்ப்பாடு
பிம்பம் – நிழலுரு
பிரகாசம் – ஒளி, பேரொளி
பிரகாரம் – சுற்று
(அதன்)பிரகாரம் – (அதன்)படி
பிரசங்கம் – சொற்பொழிவு
பிரசுரம் – வெளியீடு
பிரச்சினை – சிக்கல்
பிரதி – படி
பிரதிநிதி – சார்பாளர்
பிரதிபலித்தல் – எதிரியக்கம்
பிரதிபிம்பன் – எதிருரு
பிரத்தியோகம் – தனி
பிரபலம் – புகழ், பரவல்
பிரமாதமான – பெரிய
பிரமிப்பு – திகைப்பு
பிரயோகி – கையாளு
பிரயோசனம் – பயன்
பிரவாகம் – பெருக்கு
பிரவேசம் – நுழைவு, புகுதல், வருதல்
பிரார்த்தனை – தொழுகை,
பிடிவாதம் – விடாப்பிடி
பிரியம் – விருப்பம்
பிரேமை – அன்பு
பிரச்சனை-சிக்கல்/ இடர்
பிச்சை – இரப்பு , ஐயம்
பிரகடனம் – வெளிப்படுத்திகை
பிரச்சாரம் – பரப்புரை
பிரசவம் – மகப்பேறு
பிரசன்னம் – வருகை
பிரசித்தம் – வெளிப்படை, நன்கறிகை
பிரதானம் – முகன்மை, முதன்மை
பிரதிவாதி – எதிராளி
பிரபஞ்சம் – புடவி, பல்லுலகு
பிரபலம் – பரவலடைதல், பரவலடைந்தவர்
பிரமாண்டம் – மாபெரும்
பிரமாணம் – நெறி
பிரமாதம் – மிகுதிறம்
பிரமிப்பு – திகைப்பு
பிரமுகர் – பெருமகனார்
பிரயத்தனம் – முயற்சி
பிரயாணம் – வழிச் செல்லுகை, செலவு
பிரளயம் – ஊழி
பிரவேசம் – நுழைவு
பிராணன் – உயிர்
பிராணி – உயிரி
பிராமணன் – பார்ப்பான்
பிராய்ச்சித்தம் – கழுவாய்
பிரேதம் – பிணம், சவம்
பீடிகை – முன்னுரை
பீடை – பிணி
பீதி – அச்சம்
புண்ணியம் – நல்வினை
புத்தி – அறிவு
புத்திரன் – புதல்வன்
புனிதமான – தூய
புஷ்பம் – மலர், பூ
புஜபலம் – தோள்வன்மை
புனர் ஆவர்த்தம் -புதுப்பித்தல்
புத்திரன் – மகன்
புத்திரி – மகள்
புராணம் – பழங்கதை
புனிதம் -தூய்மை
பூஜை – வழிபாடு, பூசை
பூர்த்தி – நிறைவு
பூஷணம் – அணிகலம்
பூஜ்யம் – சுழியம்/பாழ்
பூர்வாங்கம் – தொடக்கம்
பூரணம் – நிறைவு
பூர்வீகம் – பழமை
பேட்டி – செவ்வி, நேர்காணல்
பேதம் – வேறுபாடு
பேதி – கழிச்சல்
பேரம் – விலை பேசல், முற்பேச்சு
பைத்தியம் – விசர், மனநோய்
பொக்கிசம் – கருவூலம்
பொருளாதாரம் – பொருளியல், பொருண்மியம்
போதனை – கற்பித்தல்
போகம் – துய்ப்பு
போசனம் – உணவு
போதை – வெறி , மயக்கம்
போசாக்கு – ஊட்டம்
பௌர்ணமி – முழுநிலா , வெள்ளுவா
………………………………………………………………………………………………………..
ம வரிசை
மகான் – பெரியவர்
மகாயுத்தம் -பெரும்போர்
மத்தியஸ்தர் – உடன்படுத்துபவர்
மத்தியானம் – நண்பகல்
மந்திரி – அமைச்சர்
மனசு – உள்ளம்
மனிதாபிமானம் – மக்கட்பற்று
மல்யுத்தம் – மற்போர்
மந்த ஹாசம்-மெல்லிய சிரிப்பு
மகத்துவம் / மகிமை – மேன்மை
மகரந்தம் – பூந்துகள்
மகா – மா
மகுடம் – முடி
மகோற்சவம் – திருவிழா, பெருவிழா
மகோன்னதம் – பெருஞ் சிறப்பு
மயானம் – சுடலை , சுடுகாடு
மச்சம் – மீன், மறு
மஞ்சனம் – முழுக்கு
மத்தியஸ்தம் – நடுவுநிலை
மத்தியானந்தம் – நண்பகல்
மதுரம் – இனிமை
மந்தகதி – மென்விசை
மனஸ்தாபம் – மனவேறுபாடு
மனோதைரியம் – மனவுறுதி
மானசீகம் – கற்பனை
மாகாணம் – மாநிலம்
மாங்கலியம் – தாலம் (தாலி)
மாதா – தாய்
மாதாந்தம் – மாதம் தோறும்
மாது – பெண்
மாமிசம் – புலால், ஊன்
மாலுமி – மீகான்
மிதவாதம் /மிதப்போக்கு – அமைதிப் போக்கு
மித்திரன் – நண்பன்
மிதம் – அளவு
மிருகம் – விலங்கு
மிருது – மென்மை
மிலேச்சர் – பண்பிலி
மிலேச்சத்தனம் – பண்பின்மை
முக்கியம் – முகன்மை (முதன்மை)
முகாந்தரம் – மூலம்
முகூர்த்தம் – முழுத்தம்
முண்டாசு – தலைப்பாகை
முலாம் – மேற்பூச்சு
மூர்க்கன் – முரடன்
மூர்ச்சை – அறிவிழத்தல்
மேகம் – முகில், எழிலி
மேதாவிலாசம் – மீத்திறன்
மேனி – உடல்
மைதானம் – திடல் , அரங்கம்
மோகம் – பெருவேட்கை
மோட்சம் – வீடு
மௌசு – பெரு மதிப்பு
மௌனம் – அமைதி, வாளாமை
…………………………………………………………………………………………………………….
ய வரிசை
யந்திரம் – பொறி
யதார்த்தம் – இயல்பு
யமன் – காலன்
யாகம் – வேள்வி
யாசகம் – இரப்பு
யாத்திரை – உலா
யுத்தி – செய்திறன்
யுகம் – ஊழி
யுத்தம் – போர்
யுவதி – இளம் பெண்
யூகம் – உய்த்துணர்தல்
யூகி – உய்த்துணர்
யோக்யதை – தகுதி
யோக்கியன் – தக்கோன்
யோசனை – நினைப்பு, ஒர்தல்
யௌவனம் – இளமை
………………………………………………………………………………………………………………..
ர வரிசை
ரதம் – தேர்
ரத சாரதி- தேரோட்டி
ரசிகர்- சுவைஞர்
ரகசியம்-கமுக்கம்
ரசம் – சாறு, சுவை
ரசனை – சுவை
ரட்சித்தல்- காப்பாற்றுதல்
ரத்தம் – குருதி, அரத்தம்
ரம்மியம் – அழகு
ரம்பம் – அரிவாள்
ராணி – அரசி
ராத்திரி – இரவு
ராச்சியம் – நாடு,மாநிலம்
ராஜா/ ராசா – மன்னன், அரசன்
ராணி – அரசி
ராகம் – பண்
ராசதானி – தலைநகர்
ராசி – பொருத்தம், விண்மீன் கூட்டம்
ராஜினாமா – பணி விலகல், விலகல்
ராஜபோகம்/ ராஜோபசாரம் – பேரொம்பல்
ரிஷி /ரிசி – அறிவன்
ரீங்காரம் – வண்டொலி
ருசி – சுவை
ரூபம் – வடிவம்
ரேகை – வரி
ரொக்கம் – முழுத்தொகை
ரோகம் – நோய், பிணி
ரோசம் – தன்மானம்
ரோந்து – காவலுலா
ரோமம் – மயிர்
ரௌடி – ஒழுங்கிலி
ரௌத்திரம் – வெகுளி
………………………………………………………………………………………………………………
ல வரிசை
லட்சம் – நூறாயிரம், இலக்கம்
லட்சணம் – அழகு
லட்சியம் – குறிக்கோள்
லகான் – கடிவாளம்
லஞ்சம் – கையூட்டு
லாவகம் – திறமை
லாபம் – ஆதாயம்
லாயக்கு – தகுதி
லாயம் – குதிரைப்பந்தி
லாவண்யம் – இலங்கெழில்
லிகிதர் – எழுத்தர்
லீலை – விளையாட்டு
லூட்டி – தொல்லை
லேகியம் – இளகியம்
லேஞ்சி – கைக்குட்டை
லேசு – எளிது
லோகம் – உலகம்
……………………………………………………………………………………………………
வ வரிசை
வதம் – அழித்தல்
வதனம் – முகம்
வம்சம் – கால்வழி
வஸ்திரம் – துணி, ஆடை
வக்கீல் – வழக்கறிஞர்
வதந்தி – புரளி
வர்க்கம் – தொகுதி, வகை
வர்ணம் – வண்ணம், நிறம்
வர்த்தகம் – வணிகம்
வனம்- காடு
வக்காலத்து – சார்புப் பேச்சு, ஒப்பாவணம்
வக்கிரம் – கோணல்
வசந்தம் – இளவேனில்
வசித்தல் – உறைதல்
வசீகரம் – கவர்ச்சி
வசூல் – திரட்டு
வந்தனம் – வழிபாடு
வன்மம் – தீராப்பகை
வனம் – காடு
வயோதிபம்- முதுமை
வருடம்/ வருஷம் – ஆண்டு
வரதட்சணை – மணக்கொடை
வரம் – பேறு
வரப்பிரசாதம் – நற்பேறு, பெரும்பேறு
வாஞ்சை – பற்று
வாயு – காற்று
வார்த்தை – சொல்
வாகனம் – ஊர்தி
வாசகம் – கூற்று
வாத்தியம் – இசைக்கருவி
வாந்தி – கக்கல்
வாரணம் – கடல், யானை, சேவல்
வாரம் – கிழமை, ஏழல்
வாலிபம் – இளமை
வாஸ்தவம்- உண்மை
விக்கிரகம் – வழிபாட்டுருவம்
விசாரம் – கவலை
விசாலமான – அகன்ற
விசித்திரம் – வேடிக்கை
விஷேசம் – சிறப்பு
விஞ்ஞானம் – அறிவியல்
விவசாயம்- உழவு/ வேளாண்மை
விஷயம் – செய்தி
விதானம் – மேற்கட்டி
விநாடி – நொடி
வித்தியாசம் – வேறுபாடு
விபூதி – திருநீறு , பெருமை
விமோசனம் – விடுபடுதல்
வியாதி – நோய்
விரதம் – நோன்பு
விவாகம் – திருமணம்
விவாதி -வழக்காடு
வித்தியாசாலை – கல்விக்கழகம்
விதவை – கைம்பெண்
விநியோகம் – வழங்கல்
விநோதம் – புதுமை
விமானம்- வானூர்தி
விமோசனம் – விடிவு, நீங்குகை
வியாக்கியானம் – விளக்கவுரை
வியாபாரம் – வணிகம்
விரக்தி – வெறுப்பு
விருது – வெற்றியாரம், பட்டம்
விவேகம் – நுண்ணறிவு
விற்பனன்- அறிவுடையோன்
விசம் – நஞ்சு
விசமி – தீயவன்
விசயம் – செய்தி
விகடம் – பகடி
விகாரை – புத்த கோயில்
விசமம் – இடக்கு, குழப்படி
விசாரணை – ஆய்வு
விசேடம்/ விசேஷ ம் – சிறப்பு
விதி – கட்டளை, ஊழ்
விபச்சாரம் – பரத்தமை
விபச்சாரி – பரத்தை (ஆண்பால் – பரத்தன்)
வியூகம் – அமைப்பு
விருத்தி – வளர்ச்சி
விரோதம்- பகை
விரோதி – பகையாளி
விலாசம் – முகவரி
விவரணம்/ விவரம் – விளக்கம்
விஸ்தரிப்பு – விரிவாக்கம்
விஸ்வரூபம் – பேருரு
விபத்து – மோதல், கொடுமுட்டு
வெகுமானம் – அன்பளிப்பு
வேகம் – விரைவு
வேதம் – மறை
வேதவிற்பனன்ர் – மறைவல்லார்
வேதியர் – மறையவர்
வேதனம் – சம்பளம்
வேதனை – துன்பம்
வைபவம்- விழா
வைராக்கியம் – உறுதிப்பாடு
—————————————————————————————————–
ஜ (“ஜ” ஒரு தமிழ் எழுத்தல்ல, கிரந்தம்)
ஜனநாயகம் – குடியாட்சி
ஜனம் – மக்கள்
ஜனனம் – பிறப்பு
ஜகம் – உலகம்
ஜடம் – உயிரிலி, உயிரில்லாத பொருள்
ஜந்து – ஊர்வன
ஜலம் – நீர்
ஜன்மம் – பிறப்பு
ஜன்னல் – காலதர், பலகணி
ஜலதோசம் – நீர்க்கோவை, சளிப்பு
ஜாதகம்- பிறப்புக் குறிப்பு
ஜாலம் – வேடிக்கை
ஜாக்கிரதை – எச்சரிக்கை
ஜாதி – பொருத்தமான தமிழ்ச் சொல் இல்லை (தமிழ் மரபல்ல)
ஜீவன் – உயிர்
ஜீவனம் – வாழ்க்கை
ஜீவனாம்சம் – பேணுகைப் படி
ஜூரம் – காய்ச்சல்
ஜென்மம் – பிறப்பு
ஜோதி – ஒளி
ஜோடி – இணை
ஜோடித்தல் – அழகு செய்தல்
…………………………………………………………………………………
ஸ (“ஸ” ஒரு தமிழ் எழுத்தல்ல, கிரந்தம்)
ஸ்தாபகர் – நிறுவநர்
ஸ்தாபனம் – நிறுவனம்
ஸ்தானம் – இடம்
ஸந்ததி – கால்வழி
ஸமத்துவம் – ஒரு நிகர்
ஸமரசம் – வேறுபாடின்மை
ஸமீபம் – அண்மை
ஸம்ஹாரம் – அழிவு
ஸோபை – பொலிவு
ஸௌந்தர்யம் – பேரழகு
ஸ்தாபனம் _ நிறுவனம்
ஸ்தானம் – இடம்
……………………………………………………………………………………………………………………………
ஷரத்து – சட்டக்கூறு
ஹர்த்தால் – கதவடைப்பு
………………………………………………………………………………………………………………………………………….
………………………………………………………………………………………………………
பொது
வினாடி-நொடி
நிமிடம்- மணித்துளி
மணித்தியாலம்- மணிநேரம்
மாதாந்திரம்- மாதந்தோறும்
வருஷம்- ஆண்டு
சமீப காலத்தில்- அண்மைக் காலத்தில்/சமகாலத்தில்
………………………………………………………………………………………………………………………………………